1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: ஞாயிறு, 2 ஜனவரி 2022 (17:49 IST)

நாய்க்கு பின்னணி குரல் கொடுத்த நடிகருக்கு நன்றி சொன்ன சதீஷ்

சதீஷ் ஹீரோவாக நடித்த நாய் சேகர் என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது என்பதும் இந்த படம் இன்னும் ஓரிரு மாதங்களில் வெளியாக உள்ளது என்பது குறிபிடத்தக்கது. 
 
சமீபத்தில் இந்த படத்தின் டீசர் வெளியானது என்பது படத்தின் கதையை வித்தியாசமாக இருந்ததாகவும் காமெடி இருந்ததாகவும் ரசிகர்கள் கருத்து தெரிவித்தனர்
 
இந்த நிலையில் இந்த படத்தில் நடித்த நாய்க்கு நடிகர் சிவா பின்னணி குரல் கொடுத்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது இதனை அடுத்து சிவாவுக்கு சதீஷ் டுவிட்டரில் நன்றி தெரிவித்து டுவிட் ஒன்றை பதிவு செய்துள்ளார்
 
சதீஷ் ஜோடியாக பவித்ரா லட்சுமி நடித்திருக்கும் இந்த படத்தில் ஜார்ஜ் மரியான், லிவிங்ஸ்டன், இளவரசு, ஞானசம்பந்தன், மனோபாலா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தை கிஷோர் ராக்குமார் இயக்கி உள்ளார்