1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 22 அக்டோபர் 2020 (16:34 IST)

ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட தமிழ்ப் படம் – ஆவலை ஏற்படுத்தும் டிராமா!

தமிழில் எடுக்கப்பட்ட ஒரே ஷாட் படமாக டிராமா படத்தை எடுத்துள்ளார் இயக்குனர் அஜு.

கிஷோர், சார்லி, நகுலன் வின்சென்ட்,  நடித்திருக்கும் படம் டிராமா. இந்த படத்தை பல்வேறு விளம்பரங்களை இயக்கிய அஜு என்பவர் இயக்கியுள்ளார். இந்த படத்தின் சிறப்பம்சம் என்னவென்றால் இந்த திரைப்படத்தை ஒரே ஷாட்டில் எடுத்துள்ளனர். 180 நாட்கள் ஒத்திகைக்குப் பின்னரே படப்பிடிப்பு தொடங்கி முடித்துள்ளனர்.

இதற்கு முன்னர் தமிழ்ப் படம் ஒன்று இதுபோல உருவாக்கப்பட்டதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.