ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : வியாழன், 22 அக்டோபர் 2020 (16:16 IST)

அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி- முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

கொரொனாவுக்கான தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு நடைமுறைக்கு வந்ததும் அனைத்து மக்களுக்கும் அரசின் செலவில் இலவச தடுபூசி போடப்படும் என்று தெரிவித்துள்ளார்.

பீகாரில் சட்டமன்றத் தேர்தல் வருவதை ஒட்டி இன்று  பாஜக அரசு சார்பில் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது. அதில் அம்மாநிலத்தில் பாஜக அரசு ஆட்சிக்கு வந்தால் அனைவருக்கும் கொரொனா தடுப்பூசி போட்டப்படும் என தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இன்று புதுகோட்டையில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு செய்தியாளர்களிடம் பேசி வரும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, கொரொனாவுக்கான தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு நடைமுறைக்கு வந்ததும் அனைத்து மக்களுக்கும் அரசின் செலவில் இலவச தடுபூசி போடப்படும் என்று தெரிவித்துள்ளார்.