1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: திங்கள், 26 ஜூன் 2023 (08:36 IST)

ரஹ்மான் இசையில் பாடியதால் இளையராஜா எனக்கு வாய்ப்புத் தரவில்லை… பிரபல பாடகி பகிர்ந்த தகவல்!

ரோஜா திரைப்படத்தில் இடம்பெற்ற சின்ன சின்ன ஆசை பாடலின் மூலம் இந்திய அளவில் பிரபலமானவர் பாடகி மின்மினி. மின்மினி இளையராஜாவால் மீரா படத்தின் மூலமாக அறிமுகப்படுத்தப் பட்டவர். மீண்டும் இளையராஜா அவருக்கு தேவர் மகன் படத்தில் இடம்பெற்ற மாசறு பொண்ணே வருக என்ற அருமையான பாடலை பாடும் வாய்ப்பையும் வழங்கினார்.

இதன் பிறகுதான் சின்ன சின்ன ஆசை வெளிவந்தது.  ஆனால் இந்த பாடலுக்கு பிறகு இளையராஜா அவருக்கு பாட வாய்ப்பே தரவில்லையாம். இதுபற்றி மின்மினி சமீபத்தில் கேரள ஊடகம் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

மேலும் இளையராஜா “அவர் வேறு இடங்களில் பாட ஆரம்பித்துவிட்டார். அங்கேயே பாடட்டும்” எனக் கூறியதாகவும் வேதனையை வெளிப்படுத்தியுள்ளார். அதன் பிறகு தமிழில் அதிகமாக பாடல்களை பாடாத அவர் ரஹ்மான் இசையில் கருத்தம்மா உள்ளிட்ட சில படங்களில் பாடல்களை பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.