செவ்வாய், 2 ஜூலை 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: புதன், 15 நவம்பர் 2023 (14:24 IST)

சிங்கப்பூர் சலூன் படத்தில் லோகேஷ் கனகராஜின் கதாபாத்திரம் என்ன? இயக்குனர் கோகுல் பகிர்ந்த தகவல்!

ஆர்ஜே பாலாஜி கதாநாயகனாக நடிக்கும் சிங்கப்பூர் சலூன் படத்தை இயக்குனர் கோகுல் இயக்கி வருகிறார். ஐசரி கணேஷ் தயாரிக்கிறார். இந்த படத்தில் அவர் சலூன் கடை வைத்திருக்கும் நபராக நடித்து வருகிறார் என்பது இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரில் இருந்து தெரிய வருகிறது. படத்தில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இந்த படத்தின் ஷூட்டிங்கின் போது இயக்குனர் கோகுலுக்கும், ஆர் ஜே பாலாஜிக்கும் கருத்து மோதல் எழுந்து பிரச்சனை உண்டானதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் இப்போது ஷூட்டிங் முடிந்தும் இருவருக்கும் இடையிலான பிரச்சனை தீரவில்லை என சொல்லப்படுகிறது.

இப்போது ரிலீஸ் வேலைகளில் பிஸியாக இருந்து வரும் இயக்குனர் கோகுல் இந்த படத்தைப் பற்றி பேசியுள்ளார். அதில் படத்தில் நடித்துள்ள இயக்குனர் லோகேஷ் கனகராஜின் கதாபாத்திரம் பற்றி பேசியுள்ளார். படத்தில் இயக்குனர் லோகேஷ் கனகராஜாகவே அவர் நடித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.