வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 20 ஜூலை 2017 (13:44 IST)

முன்னணி ஹீரோக்களின் படங்களில் சிம்ரன்

முன்னணி ஹீரோக்களின் படங்களில், முக்கிய கேரக்டர்களில் நடித்து வருகிறார் சிம்ரன்.



 
ஒருகாலத்தில் தமிழ் சினிமா ரசிகர்களின் தூக்கத்தைக் கெடுத்தவர் சிம்ரன். அவரின் இடுப்பாட்டத்துக்கு மயங்காதவர்கள் கிடையாது. ‘கத்தரிக்காய் முற்றினால் கடைத்தெருவுக்கு வந்துதானே ஆகவேண்டும்?’ வயதானதால் ஹீரோயின் நிலையில் இருந்து இறக்கப்பட்ட சிம்ரன், பெண்களுக்கு முக்கியத்துவம் கொண்ட கதையில் ஹீரோ இல்லாமல் நடிக்கலாம் என முடிவு செய்து கதையெல்லாம் கேட்டார். ஆனால், எதுவும் செட்டாகவில்லை.

பல மாதங்கள் கழித்து அந்த உண்மையைப் புரிந்துகொண்ட சிம்ரன், முக்கியத்துவம் கொண்ட கேரக்டர் ரோல்களில் நடிக்கத் தொடங்கியுள்ளார். பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் – சமந்தா நடிக்கும் படம், அரவிந்த் சாமி நடிக்கும் ‘வணங்காமுடி’, விக்ரம் நடிக்கும் ‘துருவ நட்சத்திரம்’ ஆகிய படங்களில் நடிக்கும் சிம்ரன், விஷால் நடிப்பில் மிஷ்கின் இயக்கும் ‘துப்பறிவாளன்’ படத்திலும் நடித்துள்ளார். உண்மையைப் புரிந்து கொண்டதால், பல படங்களில் கமிட்டாகி, ரீஎன்ட்ரியில் கலக்குகிறார் சிம்ரன்.