புதன், 19 பிப்ரவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Modified: செவ்வாய், 28 ஜூன் 2016 (16:22 IST)

டானாக நடிக்கும் சிம்பு....?

டானாக நடிக்கும் சிம்பு....?

பில்லா 3 படத்தில் நடிக்கப் போறேன் என்று சிம்பு ட்வீட் செய்ய, நீங்க, நான், யுவன் மூவரும் இணைந்து பில்லா 3 செய்யலாமா என்று வெங்கட்பிரபு மறுட்வீட் செய்ய, பொறந்ததிலிருந்தே ரெடி என்று பதிலளித்தார் சிம்பு. 


 
 
அடுத்த வருடம் பில்லா 3 டேக்ஆஃப் ஆக வாய்ப்புள்ளது.
 
அதற்கு முன், அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்தில் டானாக நடிக்க உள்ளாராம் சிம்பு.
 
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் இந்தப் படத்தில் சிம்பு மூன்று கெட்டப்புகளில் வருகிறார். அதில் ஒன்று எண்பதுகளை சேர்ந்தது. இந்த கெட்டப்பில் வரும் சிம்பு கதாபாத்திரம் டானாக சித்தரிக்கப்பட்டுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றன.
 
லவர் பாயாக இருக்கும் சிம்பு டானாக... கேட்க நல்லாத்தான் இருக்கு.