வியாழன், 29 பிப்ரவரி 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வியாழன், 10 நவம்பர் 2022 (10:35 IST)

“தமிழ் சினிமாவின் பொற்காலம் இப்போது…” வெ. த. கா. வெற்றி விழாவில் சிம்பு பேச்சு!

சிம்பு நடித்துள்ள வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் 50 ஆவது நாள் வெற்றிக் கொண்டாட்டம் நேற்று சென்னையில் நடந்தது.

சமீபத்தில் சிம்பு நடித்த வெந்து தணிந்தது காடு திரைப்படம் ரிலீஸ் ஆனது. வெளியானதில் இருந்து கலவையான விமர்சனங்களைப் பெற்றது. திரையரங்கில் இந்த படம் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை என்றாலும், ஓடிடி, சேட்டிலைட் உரிமை மூலமாக தயாரிப்பாளர் லாபம் அடைந்ததாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் நேற்று இந்த படத்தின் 50 ஆவது நாள் வெற்றிக்கொண்டாட்டம் சென்னையில் நடந்தது. அதில் படக்குழுவினர் கலந்துகொண்டனர். அப்போது பேசிய சிம்பு “இப்போது தமிழ் சினிமாவின் பொற்காலம் நடந்து கொண்டு இருக்கிறது. சமீபத்தில் ரிலீஸான எல்லா தமிழ் படங்களும் வெற்றி பெற்று நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. மக்கள் வித்தியாசமான திரைப்படங்களை ரசிக்கத் தொடங்கிவிட்டார்கள்.” எனப் பேசியுள்ளார்.