1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By cauveri manickam
Last Modified: திங்கள், 17 ஜூலை 2017 (11:43 IST)

ஏ.ஆர்.ரஹ்மானுக்கு சிம்பு ஆதரவு

லண்டன் இசை நிகழ்ச்சி சர்ச்சை விவகாரத்தில், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்துள்ளார் சிம்பு.


 

 
லண்டனில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில், தமிழ்ப் பாடல்களைப் பாடியதாகக் கூறி வட இந்தியர்கள் நிகழ்ச்சியின் பாதியிலேயே அரங்கத்தை விட்டு வெளியேறினர். சிலர், டிக்கெட்டுக்கான தொகையைத் திருப்பித்தர வேண்டுமெனவும் பிரச்னை செய்தனர். இந்த விவகாரம் பெரிதாகி, பல்வேறு பிரபலங்களும் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஆதரவாகப் பேசி வருகின்றனர்.

இந்நிலையில், நடிகர் சிம்புவும், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்துள்ளார். “இசைக்கு மொழி கிடையாது. எல்லா மக்களையும் இசை ஒருங்கிணைக்க அதுதான் காரணம். ஜீனியஸ் லெஜண்ட் ஏ.ஆர்.ரஹ்மானின் இசையின் முடிவில் எல்லோருக்கும் அமைதி கிடைக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.

கெளதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்த ‘விண்ணைத் தாண்டி வருவாயா’, ‘அச்சம் என்பது மடமையடா’ படங்களுக்கு இசையமைத்தவர் ஏ.ஆர்.ரஹ்மான் என்பது குறிப்பிடத்தக்கது.