சிம்புவின் ஷூட்டிங் ஸ்பாட்டில் ஹனிமூன் – சமந்தாவின் வித்தியாசமான ஐடியா

Cauveri Manickam (Sasi)| Last Updated: செவ்வாய், 23 மே 2017 (10:29 IST)
சிம்பு நடித்த ஷூட்டிங் ஸ்பாட்டில் ஹனிமூன் கொண்டாட முடிவு செய்துள்ளது நாக சைதன்யா – சமந்தா ஜோடி.

 
பிரபல தெலுங்கு நடிகரான நாகர்ஜுனாவின் மகனான நாக சைதன்யாவும், சமந்தாவும் ஒருவரை ஒருவர் காதலிக்கின்றனர். இவர்களுக்கு, இந்த வருட தொடக்கத்தில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இவர்களுடைய திருமணம், வருகிற அக்டோபர் மாதம்  நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
கெளதம் மேனன் இயக்கத்தில் சிம்பு – த்ரிஷா நடித்த படம் ‘விண்ணைத் தாண்டி வருவாயா’. இந்தப் படத்தின் தெலுங்குப்  பதிப்பான ‘ஏ மாய சேசவே’ படத்தில், நாக சைதன்யாவும், சமந்தாவும் ஜோடியாக நடித்திருந்தனர். சமந்தாவுக்கு அதுதான் முதல் படம். எனவே, தாங்கள் ஜோடி சேர்ந்த படத்தின் ஷூட்டிங் நடைபெற்ற நியூயார்க் நகர வீதிகளுக்குச் சென்று, தங்கள் காதலை நினைவுபடுத்தி ஹனிமூன் கொண்டாட இருக்கிறார்களாம் இருவரும்.


இதில் மேலும் படிக்கவும் :