1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: செவ்வாய், 31 டிசம்பர் 2024 (10:42 IST)

புத்தாண்டை முன்னிட்டு இந்த ஆண்டின் பிளாக்பஸ்டர் ‘லப்பர் பந்து’ படத்தின் தொலைக்காட்சி பிரிமீயர்!

பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் தயாரிப்பில் சில வாரங்களுக்கு முன்னர் வெளியான ‘லப்பர் பந்து’ திரைப்படம் இந்த் வருடத்தின் சூப்பர் ஹிட் படங்களில் ஒன்றாக இணைந்துள்ளது. அறிமுக இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கியுள்ள இந்த படத்தில் ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ், சுவாசிகா விஜய், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்க முக்கிய வேடங்களில் பால சரவணன், காளி வெங்கட் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

இந்த படம் திரையரங்குகள் மூலமாக மட்டுமே 40 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்திருக்கும் என சொல்லப்படுகிறது. 2024 ஆம் ஆண்டில் வெளியான பிளாக்பஸ்டர் படங்களில் ஒன்றாக லப்பர் பந்து அமைந்துள்ளது. இந்த படம் வெறும் ஐந்தரை கோடி ரூபாய் பட்ஜெட்டில்தான் உருவானது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் புத்தாண்டை முன்னிட்டு இந்த படம் விஜய் தொலைக்காட்சியில் நாளை மதியம் 11.30 மணிக்கு பிரிமீயர் ஆகவுள்ளது.