பிப்ரவரியில் சிம்புவின் ‘பத்து தல’ அப்டேட்: தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு
சிம்பு நடித்து வரும் பத்து தல திரைப்படத்தில் பிரவீண் எடிட்டர் இணைந்தார் என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் இந்த படத்தின் அடுத்த அப்டேட் பிப்ரவரி 3ஆம் தேதி வெளியாகும் என இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஸ்டுடியோ கிரீன் தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது
சிம்பு மற்றும் கௌதம் கார்த்திக் இணைந்து நடித்து வரும் பத்து தல படத்தை கிருஷ்ணா என்பவர் இயக்கி வருகிறார் என்பதும் இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் இசையமைத்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த படத்தில் கௌதம் கார்த்திக் சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு கிட்டதட்ட முடிவடைந்து விட்டது என்றும் மார்ச் முதல் வாரத்தில் சிம்புவின் காட்சியின் படப்பிடிப்பு நடைபெற உள்ளதாகவும் கூறப்படுகிறது
இந்த நிலையில் மாநாடு திரைப்படத்தில் எடிட்டர் பிரவீன் இந்த படத்தில் இணைந்துள்ளன நிலையில் மேலும் ஒரு முக்கிய பிரமுகர் இந்த படத்தில் இணைய இருப்பதாகவும் இது குறித்த அறிவிப்பு பிப்ரவரி 3ஆம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது