’மாநாடு’ டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு!
சிம்பு நடித்த மாநாடு படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிவடைந்து வரும் 25-ஆம் தேதி ரிலீசுக்கு தயாராக உள்ளது என்பது தெரிந்ததே
இந்த நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் படிப்படியாக நடைபெற்று வருகிறது என்பதும் நேற்று இந்த படத்தின் பாடல்கள் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் சற்று முன் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் மாநாடு படத்தின் டிரைலர் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என்று அறிவித்துள்ளார்
இதனை அடுத்து சிம்பு ரசிகர்கள் இந்த படத்தின் டிரைலரை மிகப்பெரிய ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது