1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : வியாழன், 18 நவம்பர் 2021 (07:55 IST)

அப்துல் காலிக் லுக்கில் சிம்பு - ட்ரெண்டாகும் மாநாடு ஷூட்டிங் வீடியோ!

சிம்பு நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள மாநாடு திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிவடைந்து விட்டன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் சிபுவிற்கு ஜோடியாக  கல்யாணி ப்ரியதர்ஷன் நடித்துள்ளார். 
 
மேலும், இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா நடிக்க உடன் பாரதிராஜா.எஸ்.ஏ.சந்திரசேகர் என்று பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ள இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். 
 
இந்த படம் நவம்பர் 25ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் ஷூட்டிங் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அப்துல் காலிக் லுக்கில் சிலம்பரசன் செம மாஸாக இருக்கும் இந்த வீடியோ ட்ரெண்டாகி வருகிறது.