செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: வெள்ளி, 19 நவம்பர் 2021 (17:20 IST)

சிம்புவின் ‘மாநாடு’ டிரைலர்!

சிம்பு நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகிய திரைப்படம் மாநாடு. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து வரும் 25 ஆம் தேதி வெளியாக உள்ளது. 
 
இந்த நிலையில் ‘மாநாடு’ படத்தின் டிரைலர் சற்றுமுன் வெளியாகியுள்ள நிலையில் இந்த டிரைலர் மிகப்பெரிய அளவில் இணைதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
சிம்பு எஸ்ஜே சூர்யா ஆகிய இருவரின் காட்சிகள் பெரும்பாலும் இந்த டிரைலரில் இடம் பெற்றுள்ளது என்பதும் இந்த காட்சிகள் அட்டகாசமாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
அதேபோல் பிரமாண்டமாக உருவாக்கப்பட்டுள்ள சண்டைக்காட்சிகள், பாடல் காட்சிகள் ஆகியவை கண்ணை கவரும் வகையில் உள்ளது. மொத்தத்தில் சிம்பு ரசிகர்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பினரும் ரசிக்கும் வகையில் மாநாடு திரைப்படம் உருவாக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது