1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sivalingam
Last Modified: செவ்வாய், 27 ஜூன் 2017 (22:10 IST)

சினிமாவை விட்டு விலகத்தயார்! சிம்புவின் சவாலை ஏற்க யார் தயார்?

சிம்பு நடிப்பில் கடந்த வெள்ளியன்று வெளியான 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' திரைப்படம் படுதோல்வி அடைந்திருக்கும் நிலையில் ஊடகம் ஒன்றுக்கு ஆவேசமாக பேட்டி அளித்துள்ளார்



 


சிம்பு படப்பிடிப்பிற்கு காலதாமதமாக  வருவதால்தான் படத்தின் தயாரிப்பு செலவு அதிகமாகி வருவதாகவும், தயாரிப்பாளரின் நஷ்டத்திற்கு சிம்புவின் தாமதம் தான் காரணம் என்று கூறப்பட்டது.

இந்த நிலையில் முதல்முதலாக இதற்கு விளக்கம் அளித்த சிம்பு, 'என்னை நம்பி பணம் போடும் தயாரிப்பாளர் நஷ்டப்பட கூடாது என்பதில் நான் கவனத்துடன் இருப்பேன். தயாரிப்பாளர் இருக்கும்போது சீன் போடுவதற்காக ஒருசில காட்சிகளை சில இயக்குர்கள் எடுப்பார்கள், ஆனால் அந்த காட்சிகள் படத்தில் இருக்காது.

என்னை பொருத்தவரை என்னிடம் இயக்குனர் அன்றைய படப்பிடிப்பில் என்ன எதிர்பார்க்கின்றாரோ அந்த மூடுக்கு நான் வரும்போதுதான் படப்பிடிப்புக்கு வீட்டில் இருந்து கிளம்புவேன். ஆனால் அதே நேரத்தில் சிம்பு 20 டேக், 25 டேக் எடுத்து படப்பிடிப்பை தாமதப்படுத்தியதாக ஒரே ஒரு இயக்குனர் என்னை பார்த்து கூறினால் நான் சினிமாவில் இருந்து விலகத்தயார் என்று கூறியுள்ளார். எந்த இயக்குனராவது சிம்புவின் சவாலை ஏற்க தயாரா?