1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வியாழன், 27 ஜூலை 2023 (09:50 IST)

லியோ படத்தின் வசனகர்த்தா இயக்கத்தில் மீண்டும் நடிக்கும் சித்தார்த்!

நடிகர் சித்தார்த் கதாநாயகனாக நடித்து சில ஆண்டுகளுக்கு முன்னர் வெளியான திரைப்படம்  ஜில் ஜங் ஜக்.  இந்த படம் ரிலீஸின் போது பாசிட்டிவ்வான விமர்சனங்களைப் பெற்றாலும் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. அதனால் அந்த படத்தின் இயக்குனரான தீரஜ் வைத்தி வேறு படம் எதையும் இயக்கவில்லை.

லோகேஷின் நண்பரான தீரஜ் வைத்தி, லோகேஷ் இயக்கும் படங்களில் திரைக்கதை உருவாக்கத்திலும், வசனத்திலும் பணியாற்றி வருகிறார். இப்போது லியோ படத்தில் பணியாற்றி வரும் அவர் அடுத்து ஒரு படத்தை இயக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

அந்த படத்தை நடிகர் சித்தார்த்தே நடித்து தயாரிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த படம் இந்த ஆண்டு இறுதியில் தொடங்கும் என தெரிகிறது.