செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 14 மே 2021 (08:49 IST)

இந்த ஹீரோவை நியாபகம் இருக்கா? ரெண்டே படத்துல காணாம போயிட்டாரே!

நடிகர் சித்தார்த் வேணுகோபால் தனது லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்றை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

ஆனந்த தாண்டவம் படத்தின் மூலமாக நடிகராக அறிமுகமானவர் நடிகர் சித்தார்த் வேணுகோபால். அந்த படம் பெரிய அளவில் வரவேற்பைப் பெறவில்லை என்றாலும், பாடல்கள் ஹிட்டாகின. அதுமட்டுமில்லாமல் சித்தார்த் வேணுகோபால் தமிழ் சினிமாவுக்கு கிடைத்த மற்றொரு சாக்லேட் பாய் ஹீரோவானார். ஆனால் அவர் தொடர்ச்சியாக பட்ங்களில் நடிக்கவில்லை.

சில ஆண்டு இடைவெளிகளுக்குப் பின் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவான நான் படத்தில் இரண்டாவது கதாநாயகனாக நடித்திருந்தார். அதன் பின்னர் அவர் எந்த படத்திலும் நடிக்கவில்லை. இந்நிலையில் இப்போது பல ஆண்டுகளுக்கு பிறகு தனது புகைப்படத்தை சமூகவலைதளத்தில் பகிர, பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.