ஒட்டுக்கேட்பு விவகாரம்; -நடிகர் சித்தார்த் விமர்சனம்!
அரசியல் தலைவர்களின் ஒட்டு கேட்பு விவகாரம் இந்தியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இதுகுறித்து நடிகர் சித்தார்த் தனது டுவிட்டரில் டுவிட் ஒன்றை பதிவு செய்துள்ளார்
இன்று காலை முதல் வெளியான தகவலில் பெகாசஸ் என்ற செயலின் மூலம் அரசியல் தலைவர்களின் செல்போன் பேச்சை ஒட்டுக் கேட்கப்படுவதாக பெரும் சர்ச்சை எழுந்தது இந்த விவகாரத்தில் ராகுல் காந்தி பிரியங்கா காந்தியின் பிரசாந்த் கிஷோர் உள்பட பல விஐபிகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் இந்த விவகாரம் குறித்து நடிகர் சித்தார்த் தனது டுவிட்டரில் கூறியதாவது ஆரோக்கிய சேது போன்ற நம்பிக்கையற்ற செயலிகளை பயன்படுத்த மத்திய அரசு ஏன் வலியுறுத்துவது என இப்போதுதான் புரிகிறது
அவர்கள் எப்போதும் பொய் சொல்கிறார்கள் எப்போதும் உளவு பார்க்கிறார்கள் எனவே நாம் அவர்களை எதிர்த்து கேள்வி கேட்டால் அவர்களுக்கு குட்பை சொல்லிவிடலாம் என்று தெரிவித்துள்ளார்
சித்தார்த்தின் இந்த டுவிட் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த சில ஆண்டுகளாகவே சித்தார்த் மத்திய அரசுக்கு எதிரான கருத்துக்களை தெரிவித்து வருகிறார் என்பதும் எடப்பாடி பழனிச்சாமியின் அரசு இருக்கும்வரை மாநில அரசும் அவர் கடுமையாக விமர்சனம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது