1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: வெள்ளி, 3 செப்டம்பர் 2021 (10:49 IST)

நான் உயிரோடு தான் இருக்கேன்: அலறியடித்து டுவிட் போட்ட தமிழ் ஹீரோ!

தமிழ் ஹீரோ சித்தார்த் இறந்துவிட்டதாக தவறுதலாக வெளியான செய்தியை பார்த்து அதிர்ந்து போன நடிகர் சித்தார்த் நான் உயிரோடுதான் இருக்கிறேன் என அலறி அடித்து போட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
பிக்பாஸ் நிகழ்ச்சியின் வின்னரும் பாலிவுட் நடிகருமான சித்தார்த்தா என்பவர் நேற்று மாரடைப்பு காரணமாக மரணம் அடைந்தார். இதற்கு சல்மான்கான், பூஜா ஹேக்டே உட்பட பலர் தங்களது இரங்கலை தெரிவித்து இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் சமூக வலைதளங்களில் உள்ள ஒரு சிலர் தமிழ் நடிகர் சித்தார்த் இறந்துவிட்டதாக பதிவு செய்து அவருடைய புகைப்படத்தையும் பதிவு செய்தனர். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த சித்தார்த், ‘நான் உயிரோடுதான் இருக்கிறேன் என்று ஏற்கனவே இதே போல் நிறைய நடந்து விட்டது என்றும் என் மீது வேண்டுமென்றே வெறுப்பை கக்குகிறார்கள் என்றும் டுவிட்டை பதிவு செய்தார். சித்தார்த்தின் இந்த டுவிட் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது