திங்கள், 6 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: சனி, 3 ஜூன் 2023 (07:05 IST)

இப்போது ஏன் அரசியல் பேசுவதில்லை… சித்தார்த் சொல்லும் அடடே காரணம்!

பாய்ஸ் என்ற திரைப்படத்தில் அறிமுகமாகி அதன்பின்னர் தமிழ் தெலுங்கு இந்தி உள்பட பல திரைப்படங்களில் நடித்தவர் நடிகர் சித்தார்த். அடுத்து மணிரத்னம் இயக்கிய ஆயுத எழுத்து படத்திலும் நடித்தார். ஆனால் அதன் பின்னர் சொல்லிக்கொள்ளும்படியான வெற்றிகள் அவருக்குக் கிடைக்கவில்லை. கடந்த சில வருடங்களாக சித்தார்த் நடித்த படங்கள் வெற்றி பெறாத நிலையில் இப்போது இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் சில ஆண்டுகளுக்கு முன்னர் அரசியல் சம்மந்தமாக அடிக்கடி ட்வீட் செய்து தன்னை ஒரு சமூக சீர்திருத்த போராளியாக காட்டிக்கொண்டார். பலரும் அப்போது சித்தார்த் ட்வீட்களை பகிர்ந்து அவரை பாராட்டி வந்தனர். ஆனால் திடீரென அதன்பிறகு சைலண்ட் ஆகிவிட்டார்.

இந்நிலையில் இப்போது டக்கர் என்ற படத்தில் நடித்துள்ள சித்தார்த் இப்போது ஏன் அரசியல் பற்றி பேசுவதில்லை என்ற கேள்விக்கு பதிலளித்துள்ளார். அதில் “முன்பெல்லாம் பல கருத்துகளைப் பேசிவந்தேன். ஆனால் என்னை நம்பி இப்போது தயாரிப்பாளர்கள் இருப்பதால் அவர்களுக்கு பிரச்சனை வரக் கூடாது என்பதற்காக அமைதியாகிவிட்டேன்” எனக் கூறியுள்ளார்.