ஸ்ருதியின் அம்மாவாகும் ராதிகா


Sasikala| Last Modified செவ்வாய், 30 ஆகஸ்ட் 2016 (15:36 IST)
சமீபத்தில் வந்த திரைப்படங்களில் ராதிகாவின் அம்மா கதாபாத்திரங்கள்தான் அதிகம் பேசப்பட்டது. 

 


நானும் ரௌடிதான் படத்தில் விஜய் சேதுபதியின் அம்மா, தங்கமகனில் தனுஷின் அம்மா, மீண்டும் தர்மதுரையில் விஜய் சேதுபதியின் அம்மா. 
 
எஸ் 3 படத்தில் ராதிகா ஸ்ருதியின் அம்மாவாக நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
ஹரி இயக்கத்தில் சூர்யா, அனுஷ்கா நடித்துவரும் எஸ் 3 படத்தில் ஸ்ருதிக்கு முக்கியமான வேடம். அவரது அம்மாவாக ராதிகா நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஹாரிஸ் ஜெயராஜ் இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார்.
 
ராதிகா அம்மாவாக நடிப்பதால் அந்த கதாபாத்திரம் மீது எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :