வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Modified: புதன், 29 மார்ச் 2023 (15:20 IST)

பட்டு சேலையில் Fun பண்ணும் ஸ்ருதி ஹாசன் - வீடியோ!

கமல் ஹாசனின் மூத்த மகள் என்ற மிகப்பெரிய வாரிசு ப்ராண்டுடன்  தமிழில் ஏழாம் அறிவு படத்தில் நடித்து ஹீரோயினாக அறிமுகமானவர் ஸ்ருதி ஹாசன். அதற்கு முன்னர் குழந்தை நட்சத்திரம், குழந்தை பாடகி என தமிழ் சினிமாவில் அடியெடுத்து வைத்தார். 
 
இவர் தமிழ், தெலுங்கு மொழிகளில் தொடர்ந்து நடித்து வருகிறார். மும்பையில் காதலனுடன் வசித்து வரும் ஸ்ருதி ஹாசன் சமூக வலைதளங்களில் மிகவும் சுறுசுறுப்பாக புகைப்படங்கள்  மற்றும் வீடியோக்களை தொடர்ந்து பதிவேற்றி வருகிறார்.
 
இந்நிலையில் தற்போது ஆரஞ்சு நிற பட்டு சேலை உடுத்து அழகாக எடுத்துக்கொண்ட வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் காதலனின் உறவினர்கள் முன்பு பெண்கள் எப்படி அடக்கமாக இருக்கிறார்கள் என்றும் அவர்கள் சென்ற பிறகு எப்படி இருப்பார்கள் என்றும்  எக்ஸ்பிரஷன் டான்ஸ் ஆடி Fun செய்துள்ளார். இதோ அந்த வீடியோ: 
 
 
 
 
அண்மையில் 'வீர சிம்ம ரெட்டி'  படத்தின் ப்ரமோஷனில் கலந்துக்கொண்ட ஸ்ருதி ஹாசன் சிரஞ்சீவியின்  'வால்டர் வீரய்யா பட ப்ரோமோஷனில் கலந்துக்கொள்ளவில்லை. இதுகுறித்து ரசிகர்கள் கேள்வி எழுப்பியதற்கு, 
 
மன்னித்துவிடுங்கள்! நான் மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளாகியுள்ளேன். அதனால் தான் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை" அன்றாட வாழ்வில் வீட்டிலோ அல்லது படப்பிடிப்பிலோ ஏதேனும் வருத்தப்படுமளவிற்கு நடந்துவிட்டால்  நான் மனவுளைச்சலுக்கு ஆளாகி விடுவேன். அப்படித்தான் தற்போது மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி சிகிச்சை எடுத்து வருகிறேன் என கூறினார்.