1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Abimukatheesh
Last Updated : வெள்ளி, 27 அக்டோபர் 2017 (19:21 IST)

அவருக்கு அரசியல் தெரியுமோ தெரியாதோ! ஆனால்.... கமல் பற்றி ஸ்ருதிஹாசன் கருத்து

என் தந்தை இந்த சமுதாயத்தை நன்றாக புரிந்து கொண்டவர் என்று ஸ்ருதி ஹாசன் கூறியுள்ளார்.


 

 
கமல் அரசியலுக்கு வருவது கூறிய பேசிய பின் அவர் எப்போது அரசியலுக்கு வருவார், எப்போ கட்சி தொடங்குவார்? என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். ஊடகத்தின் அவசரத்துக்கு ஏற்ப நான் கட்சி தொடங்க முடியாது என்று கமல் கூறியிருந்தார்.
 
இந்நிலையில் ஸ்ருதி ஹாசன் தனது தந்தை அரசியலுக்கு வரும் குறித்து பேசியுள்ளார். அவர் கூறியதாவது:-
 
என் தந்தை அரசியலுக்கு வருவதை நான் வரவேற்கிறேன். அவர் மனசாட்சியுள்ள நல்ல குடிமகன். அவருக்கு அரசியல் தெரியுமோ, தெரியாதோ. ஆனால் இந்த சமுதாயத்தை நன்றாக புரிந்து கொண்டவர்.