பாலாஜி சக்திவேலின் படத்தில் ஸ்ருதி ஹரிகரன்

Mahalakshmi| Last Modified சனி, 11 ஏப்ரல் 2015 (11:13 IST)
நெருங்கி வா முத்தமிடாதே படத்தில் அறிமுகமான கன்னட நடிகை ஸ்ருதி ஹரிகரன் பாலாஜி சக்திவேலின் புதிய படத்தில் நடிக்கிறார்.
வழக்கு எண்ணுக்குப் பிறகு வழக்கம் போல் சில வருட இடைவெளி எடுத்துக் கொண்டவர் ரா ரா ராஜசேகர் என்ற படத்தை எழுதி இயக்கி வருகிறார். இதில் ஸ்ருதி ஹரிகரன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். படத்தில் இவர் மட்டுமின்றி வேறு நடிகைகளும் முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளனர்.
 
பாலாஜி சக்திவேலுக்குப் பிடித்தமான கேமராமேன் விஜய் மில்டன், விக்ரம் நடிக்கும் படத்தை இயக்கி வருவதால், கன்னட லுnசியா படத்தின் ஒளிப்பதிவாளர், சித்தார்த்தாவை தனது படத்தில் கமிட் செய்துள்ளார்.
 
படப்பிடிப்பு தற்போது நடந்து வருகிறது.


இதில் மேலும் படிக்கவும் :