செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By mahendran
Last Modified: புதன், 4 ஆகஸ்ட் 2021 (15:48 IST)

சலார் படத்தில் இணைந்த ஸ்ருதிஹாசன்!

பாகுபலி படங்களுக்கு பிறகு இந்திய சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் பிரபாஸ். இவர் நடிப்பில் வெளியான பாகுபலி1,2 ஆகிய படங்கள் பெரும் வெற்றி பெற்றதை அடுத்து அவர் புகழும் பெருகிறது. மார்க்கெட்டும் எகிறியது.  சூப்பர் ஸ்டார் அளவுக்கு அளவு இமேஜும் ஏகத்தும் அதிகரித்துள்ளது. அதனால் அடுத்து அவர் நடிக்கவுள்ள திரைப்படம் என்ன என்ன என்று சினிமாத்துறை மட்டுமல்லாமல் ரசிகர்களும் எதிர்பார்க்க ஆரம்பித்துவிட்டனர்.

இதையடுத்து கேஜிஎப் படத்தின் இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் சலார் என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் பிரபாஸ். இந்த படத்தின் பூஜை சமீபத்தில் நடந்து முடிந்த நிலையில் தற்போது கதாநாயகியாக ஸ்ருதிஹாசன் நடிக்க உள்ளார் என்ற அறிவிப்பு சில மாதங்களுக்கு முன்னர் வெளியானது. இந்நிலையில் இப்போது ஐதராபாத்தில் நடக்கும் படப்பிடிப்பில் ஸ்ருதிஹாசன் கலந்துகொண்டு படக்குழுவுடன் இணைந்துள்ளார்.