1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 23 ஜூன் 2021 (08:24 IST)

ஃபீல்ட் அவ்ட் ஆனாலும் கவர்ச்சி குறையவில்லை… ஸ்ரேயாவின் லேட்டஸ்ட் புகைப்படம்!

நடிகை ஸ்ரேயா தன் கணவரோடு இப்போது ஸ்பெயினில் வசித்து வருகிறார்.

தென்னிந்திய மொழி படங்களில் முன்னணி நடிகையாக விளங்கியவர் ஸ்ரேயா. ரஜினியோடு சிவாஜி படத்தில் நடித்ததை அடுத்து முன்னணி கதாநாயகர்களோடு ஜோடி சேர்ந்து நடித்து வந்தார். இடையில் பெரிய சம்பளத்துக்காக வடிவேலுவின் இந்திரலோகத்தில் நா அழகப்பன் படத்தில் ஒரு பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆடினார். அதன் பிறகு அவருக்கான வாய்ப்புகள் குறைய ஆரம்பித்தன.

ஒரு கட்டத்தில் மற்ற மொழிகளிலும் வாய்ப்புகள் குறைய வெளிநாட்டுக் காதலரை திருமணம் செய்துகொண்டு பாரினிலேயே செட்டில் ஆகிவிட்டார். அவ்வப்போது சில படங்களில் நடித்து வந்த அவர் சமூகவலைதளங்கள் மூலமாக ரசிகர்களோடு தொடர்பில் இருந்து வந்தார். இந்நிலையில் நீச்சல் உடையில் ஏரியில் குளிக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.