வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sugapriya Prakash

தீராத சோகங்கள் தீரும் சில நாளில்... மனதை ரணமாக்கும் எஸ்.பி.பி-யின் கடைசி பாடல்!

எஸ்பி பாலசுப்பிரமணியம் கடைசியாக பாடிய பாடலில் இடம்பெற்றுள்ள வரிகள் அனைவரையும் சோதத்தில் மூழ்கடித்துள்ளது. 
 
பிரபல பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்கள் கடந்த சில நாட்களாக கொரோனா உள்ளிட்ட ஒரு சில பிரச்சனைகளுக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.  
 
எஸ்பிபி உடல்நிலை நேற்று கவலைக்கிடமாக இருப்பதாக செய்திகள் வெளிவந்த நிலையில் சரியாக இன்று பிற்பகல் 1.04 மணிக்கு எஸ்பிபி காலமானதாக செய்திகள் வெளியாகியுள்ளது. எஸ்பிபி காலமானதை மருத்துவமனை நிர்வாகம் சற்று முன் அறிக்கை மூலம் உறுதிசெய்துள்ளது. 
இந்நிலையில் அவர் கடைசியாக பாடிய பாடலில் இடம்பெற்றுள்ள வரிகள் அனைவரையும் சோதத்தில் மூழ்கடித்துள்ளது. ஆம், பாபு யோகேஸ்வரன் இயக்கத்தில் விஜய ஆண்டனி நடித்துள்ள தமிழரசன் என்ற படத்தில் இளையராஜா இசையில் கவிஞர் பழநிபாரதி எழுதிய ”நீதான் என் கனவு மகனே, வா வா கண் திறந்து...” என துவங்கும் அந்த பாடல் தான் எஸ்.பி.பி பாடிய கடைசி பாடல்.