1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 10 டிசம்பர் 2021 (17:58 IST)

ஆட்டோவில் தியேட்டருக்கு வந்த பிரபல தமிழ் நடிகை: வைரல் புகைப்படம்!

ஆட்டோவில் தியேட்டருக்கு வந்த பிரபல தமிழ் நடிகை: வைரல் புகைப்படம்!
பிரபல தமிழ் திரையுலகில் நடிகை ஒருவர் தியேட்டருக்கு ஆட்டோவில் வந்த புகைப்படம் வைரலாகி வருகிறது. 
 
ரஜினி நடித்த சிவாஜி, விஜய் நடித்த அழகிய தமிழ் மகன், தனுஷ் நடித்த திருவிளையாடல், விக்ரம் நடித்த கந்தசாமி உள்பட பல திரைப்படங்களில் நடித்தவர் நடிகை ஸ்ரேயா சரண்
 
இவர் முக்கிய கேரக்டரில் நடித்த கமணம் என்ற திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது தமிழ் உள்பட ஐந்து மொழிகளில் வெளியாகியுள்ள இந்த படத்தின் விமர்சனங்கள் பாசிட்டிவாக வெளிவந்து கொண்டிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் தான் நடித்த திரைப்படத்தை ரசிகர்களுடன் சேர்ந்து பார்க்க இன்று திரையரங்கிற்கு ஸ்ரேயா சரண் வந்தார். அவர் தனது சொந்த காரில் வராமல் ஆட்டோவில் வந்தது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது என்பது குறிப்பிடத்தக்கது