1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : செவ்வாய், 19 டிசம்பர் 2017 (21:55 IST)

ஷ்ரத்தா ஸ்ரீநாத்தின் அடுத்த ஹீரோ யார்னு தெரியுமா?

ஷ்ரத்தா ஸ்ரீநாத், அடுத்ததாக உதயநிதி ஸ்டாலின் ஜோடியாக நடிக்கப் போகிறார் என்கிறார்கள்.

 
மணிரத்னம் இயக்கிய ‘காற்று வெளியிடை’ படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்தவர் ஷ்ரத்தா ஸ்ரீநாத். அதன்பிறகு ‘இவன் தந்திரன்’, ‘விக்ரம் வேதா’, ‘ரிச்சி’ ஆகிய படங்களில் நடித்தார். அதுவும் ‘விக்ரம் வேதா’வில் சேலை கட்டி, மூக்குத்தி அணிந்து நடித்த அவர் அழகைப் பார்த்து இளைஞர்கள் அவரிடம் மனதைப் பறிகொடுத்துள்ளனர்.
 
அடுத்ததாக, உதயநிதி ஸ்டாலின் ஜோடியாக ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிக்கப் போகிறார் எனத் தகவல் கிடைத்துள்ளது. விஷால், சமந்தா நடிப்பில் ‘இரும்புத்திரை’ படத்தை இயக்கிவரும் பி.எஸ்.மித்ரன், இந்தப் படத்தை இயக்கப் போகிறார். ‘இரும்புத்திரை’ ரிலீஸான பிறகு இந்தப் படத்தின் வேலைகள் தொடங்க இருக்கின்றன.
 
தற்போது பிரியதர்ஷன் இயக்கும் ‘நிமிர்’ படத்தில் நடித்துவரும் உதயநிதி ஸ்டாலின், அடுத்து சீனு ராமசாமி இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். இதன் படப்பிடிப்பு அடுத்த மாதம் 19ஆம் தேதி தொடங்க இருக்கிறது. அதைத் தொடர்ந்து பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் நடிக்கப் போகிறார் உதயநிதி ஸ்டாலின்.