திங்கள், 6 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Cauveri Manickam (Sasi)
Last Modified: புதன், 23 ஆகஸ்ட் 2017 (12:17 IST)

படப்பிடிப்பை ரத்துசெய்த விஷால்

வருகிற சனிக்கிழமை அனைத்து படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்படுவதாக விஷால் அறிவித்துள்ளார்.

 
தென்னிந்திய திரைப்பட மற்றும் சின்னத்திரை சண்டை இயக்குநர்கள் மற்றும் சண்டைக் கலைஞர்கள் சங்கத்தின் 50வது ஆண்டு  விழா, வருகிற சனிக்கிழமை (ஆகஸ்ட் 26) நடைபெற உள்ளது. சென்னையில் பிரம்மாண்டமாகக் கொண்டாடப்படும் இந்தப் பொன்விழாவை முன்னிட்டு, படப்பிடிப்புகளை ரத்து செய்யுமாறு தயாரிப்பாளர் சங்கத்துக்கு கோரிக்கை வைத்தது ஸ்டண்ட்  யூனியன். அந்தக் கோரிக்கையை ஏற்று, அன்றைய தினம் படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்படும் என அறிவித்துள்ளார்  தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவரான விஷால்.