1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 11 மே 2021 (11:53 IST)

உதயநிதி படத்தில் தெலுங்கு நடிகரின் மகள்!

உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் படத்தில் தெலுங்கு நடிகர் ராஜசேகரின் மகள் ஷிவானி நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

இந்தியில் வெளியாகி ஹிட் அடித்த் ஆர்ட்டிகிள் 15 படத்தின் தமிழ் ரீமேக்கில் உதயநிதி ஸ்டாலின் நடிக்க கனா இயக்குனர் அருண்ராஜா காமராஜா இயக்க இருந்தார். அந்த படம் தேர்தல் காரணமாக தொடங்கப்படாமல் இருந்த நிலையில் இப்போது படப்பிடிப்பு தொடங்கி உள்ளது. இந்த படத்தை போனி கபூர் தயாரிக்க, கனா இயக்குனர் அருண் ராஜா காமராஜ் இயக்க உள்ளார்.

இந்த படத்தில் உதயநிதியோடு, தன்யா ரவிச்சந்திரன், சுரேஷ் சக்கரவர்த்தி மற்றும் சிவாங்கி ஆகியோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இந்நிலையில் இப்போது தெலுங்கு நடிகர் டாக்டர் ராஜசேகரின் மகள் ஷிவானியும் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளாராம்.