Papiksha Joseph|
Last Updated:
திங்கள், 25 ஜனவரி 2021 (20:11 IST)
விஜய் டிவியில் ஒளிபரப்பான “கடைக்குட்டி சிங்கம்” என்ற நாடகத்தின் மூலம் சீரியல் நடிகையாக அறிமுகமானவர் நடிகை ஷிவானி நாராயணன். அதன் பின்னர் விஜய் டிவியிலிருந்து வெளியேறி ஜீ தமிழ் தொலைக்காட்சியில் முகம் காட்ட ஆரம்பித்தார்.
அதில் தற்போது “ரெட்டை ரோஜா” சீரியலில் இரட்டை வேடத்தில் நடித்து தமிழிக இல்லத்தரசிகளின் மனதில் குடி புகுந்துவிட்டார். இந்த கொரோனா வைரஸ் பரவுதலால் ஊரடங்கு உத்தரவின் கீழ் வீட்டிலேயே இருந்து வந்த ஷிவானி தினம் ஒரு கவர்ச்சி போட்டோவை இன்ஸ்டாவில் வெளியிட்டு குறுகிய காலத்தில் நயன்தாரா ரேஞ்சிற்கு பிரபலமானார்.
அதையடுத்து அவருக்கு பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் பங்கேற்க வாய்ப்பு கிடைத்தது. அதிலிருந்து வெளியேறியதும் அம்மணி கவர்ச்சிக்கு பெரிய கேட் போட்டு இழுத்து மூடிவிட்டதாகவும் பிக்பாஸ் மூலம் கற்றுக்கொண்ட நல்ல விஷயமாக இனி அதை கடைபிடிக்க உள்ளார் எனவும் பேசப்பட்டது. அதுமட்டுமல்லாமல் ஆரி சொல்லி தான் ஷிவானி இப்படி மாறியுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியது.
இந்நிலையில் தற்போது ஷிவானியே, ஆமா யாரு உங்களுக்கு அப்படியெல்லாம் சொன்னது? என கேட்பது போன்று மீண்டும் முரட்டு கவர்ச்சியில் இறங்கியுள்ளார். ஸ்லீவ் உடையில் எட்டி பார்த்து போஸ் கொடுத்து செம கிக்கு ஏத்தியுள்ளார். இதனை கண்ட அம்மணியின் ரசிகர்கள்,
"மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன" என பாடலாய் பாடி வர்ணித்துத்தள்ளியுள்ளனர்.