வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Updated : வெள்ளி, 12 மார்ச் 2021 (23:00 IST)

’சின்னத்தல’யுடன் புகைப்படம் எடுத்து கொண்ட ஷிவானி, ஷிவாங்கி!

’சின்னத்தல’யுடன் புகைப்படம் எடுத்து கொண்ட ஷிவானி,
கிரிக்கெட் ரசிகர்கள் தல என்று தோனியை அன்புடன் அழைத்து வருவது போல் சின்ன தல என்று சுரேஷ் ரெய்னாவை அழைத்து வருகிறார்கள் என்பது தெரிந்ததே
 
அந்த வகையில் தற்போது ஐபிஎல் போட்டி மிக விரைவில் தொடங்க உள்ளதை அடுத்து பயிற்சி ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன. பயிற்சிக்காக தோனி உள்பட பல சிஎஸ்கே வீரர்கள் சென்னை வந்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது 
 
’சின்னத்தல’யுடன் புகைப்படம் எடுத்து கொண்ட
இந்த நிலையில் சமீபத்தில் சென்னை வந்த சின்ன தல சுரேஷ் ரெய்னாவுடன் குக் வித் கோமாளி போட்டியாளர் ஷிவாங்கி மற்றும் பிக்பாஸ் ஷிவானி ஆகியோர் புகைப்படம் எடுத்துள்ளனர். இந்த புகைப்படங்களை ஷிவாங்கி மற்றும் ஷிவானி ஆகியோர் தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்கள் என்பதும் அந்த பதிவு புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது