சண்முக பாண்டியன் நடிக்கும் படைத்தலைவன் படத்தின் ரிலீஸ் தேதி இதுவா?
மறைந்த நடிகர் விஜயகாந்தின் இளைய மகன் சண்முகபாண்டியன் மதுர வீரன் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். ஆனால் இன்னும் அவர் ஹிட் கொடுக்க முடியாமல் போராடி வருகிறார். இவர் நடித்த ‘மதுர வீரன்’ திரைப்படம் பெரிய வெற்றியை பெறவில்லை என்றாலும் ஓரளவு அவருக்கான அடையாளத்தைப் பெற்று தந்தது.
இந்நிலையில் இப்போது சண்முகபாண்டியன் காட்டையும் யானைகளையும் பின்னணியாகக் கொண்ட படை தலைவன் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை வால்டர் மற்றும் ரேக்ளா ஆகிய படங்களை இயக்கிய அன்பு இயக்கியுள்ளார். படத்துக்கு இளையராஜா இசையமைக்கிறார். பெரும்பாலான காட்சிகள் கேரளாவில் படமாக்கப்பட்டுள்ளன. ஷூட்டிங் 90 சதவீதம் அளவுக்கு முடிந்துள்ள நிலையில் இன்னும் 10 நாட்கள் மட்டும் மீதமுள்ளது.
இந்நிலையில் இந்த படத்தை ஏப்ரல் 14 ஆம் தேதி ரிலிஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.