செவ்வாய், 2 ஜூலை 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: செவ்வாய், 1 ஆகஸ்ட் 2023 (09:55 IST)

வேள்பாரிக்கு முன்பாக ஷங்கர் இயக்கும் மற்றொரு படம்… இவர்தான் ஹீரோவா?

கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் ’இந்தியன் 2’ படம் தொடங்கப்பட்டு நான்கு ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்னும் ரிலீஸாகவில்லை. படப்பிடிப்புத் தளத்தில் நடந்த விபத்தில் மூன்று பேர் உயிரிழந்ததை அடுத்து படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. அந்த பிரச்சனைகளை எல்லாம் கடந்து, தற்போது மீண்டும் தொடங்கி ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

அதே நேரத்தில் ஷங்கர், ராம்சரண் தேஜா நடிப்பிலும் கேம் சேஞ்சர் என்ற படத்தை இயக்கி வருகிறார். இரு படங்களையும் மாறி மாறி இயக்கி வரும் ஷங்கர், அடுத்து வேள்பாரி படத்தை மிக பிரம்மாண்டமாக இயக்க உள்ளதாகவும், அந்த படம் மூன்று பாகங்களாக வரும் எனவும் சொல்லப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இப்போது வேள்பாரிக்கு முன்பாகவே ஷங்கர் ராம்சரணை வைத்து ஒரு படத்தை இயக்க உள்ளதாகவும் அந்த திரைப்படம் பற்றிய அறிவிப்பு இந்த மாதம் வெளியாகும் என சொல்லப்படுகிறது.