வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வியாழன், 7 மார்ச் 2024 (10:34 IST)

கேம்சேஞ்சர் படத்தின் முதல் சிங்கிள் பாடல் ரிலீஸ் எப்போது? வெளியான அப்டேட்!

இயக்குனர் ஷங்கர் ராம்சரண் மற்றும் கியாரா அத்வானி ஆகியோர் நடிக்கும் கேம்சேஞ்சர் என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் எஸ் ஜே சூர்யா வில்லனாக நடிக்கிறார். இந்த படத்துக்காக கார்த்திக் சுப்பராஜ் கதை எழுதித் தந்துள்ளார்.  இந்த படத்தின் ஷூட்டிங் பெருமளவுகு முடிந்துள்ளதாக சொல்லப்படுகிறது. கடந்த  2021 ஆம் ஆண்டு ஆண்டு தொடங்கப்பட்ட படம் இன்னும் முடிவுக்கு வரவில்லை.

அதற்குக் காரணம் இயக்குனர் ஷங்கர் இந்தியன்  படத்தையும் அடுத்தடுத்து இயக்கி வருவதுதான். இந்தியன் 2 இப்போது மூன்றாவது பாகமும் வர இருப்பதால் மேலும் அந்த படத்தின் ஷூட்டிங் நாட்கள் அதிகமாகியுள்ளன. இதனால் கேம்சேஞ்சர் படத்தை முடிப்பதில் இன்னும் தாமதம் ஆகும் என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் அதிருப்தியடைந்துள்ள ரசிகர்களுக்காக படத்தின் முதல் சிங்கிள் பாடலை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாம். அதன்படி மார்ச் 27 ஆம் தேதி ராம்சரணின் பிறந்த நாளன்று முதல் சிங்கிள் பாடல் ரிலீஸ் ஆகும் என சொல்லப்படுகிறது.