1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: வியாழன், 1 ஏப்ரல் 2021 (17:19 IST)

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஷகிலா மகள்? பரபரப்பு தகவல்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் சீசன் 5 நிகழ்ச்சி வரும் ஜூன் மாதம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் போட்டியாளர்கள் குறித்த தகவல்கள் சமூக வலைதளங்களில் கசிந்து வருகிறது. அவ்வாறு கசிந்த தகவலின்படி ஷகிலாவின் மகள் மிலா என்பவரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருப்பதாக கூறப்படுகிறது 
 
ஷகிலாவின் மகள்ஒரு பேஷன் டிசைனர் என்பதும் அவர் ஒரு திருநங்கை என்பதும் தெரிந்ததே. குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் ஷகிலா பிரபலமடைந்த நிலையில் அவருடைய மகளும் பிரபலமடைந்து வந்தார் என்பதும் ஷகிலாவும் மிலாவும் இணைந்த புகைப்படங்கள் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரல் ஆனது என்பதும் தெரிந்ததே 
 
இந்த நிலையில் தற்போது ஷகிலாவின் தத்தெடுத்த மகளான மிலா என்பவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருப்பதாக வெளிவந்திருக்கும் தகவலால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் போட்டியாளர்களான பவித்ரா, கனி, சுனிதா ஆகியோர்களும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.