1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Murugan
Last Updated : சனி, 17 அக்டோபர் 2015 (20:34 IST)

ஷாகித் சொல்வதை கேளுங்க... முன்னாள் காதலிதான் சரியாக இருப்பாராம்

தனது முன்னாள் காதலி கரினா கபூர்தான் தனக்கு சரியான ஜோடி என்கிறார் பாலிவுட் நடிகர் ஷாகித் கபூர்


 


ஒருகாலத்தில் ஷாகித் கபூரும், கரீனா கபூரும் காதலர்கள். இவர்கள் பொதுவெளியில் போட்டுக் கொண்ட பிரெஞ்ச் முத்தம் தேசிய பிரபலம். ஸ்பீடு பிரேக்கர் இல்லாத சாலையில் சென்று கொண்டிருந்த இவர்களின் காதலை ஒரு சுப்ரபாதத்தில் யு டர்ன் அடித்து கவிழ்த்தார் கரீனா. சைப் அலிகானை இவர் காதலித்ததும், திருமணம் செய்ததும் அனைவரும் அறிந்த கதை.
 
ஷாகித் கபூரும் திருமணம் செய்து கொண்ட நிலையில், தனது முன்னாள் காதலி குறித்து பேசியிருக்கிறார்.
 
ஷாகித், உத்தா பஞ்சாப் என்ற படத்தில் நடிக்க உள்ளார். இதில் கரீனா நடித்தால் சிறப்பாக இருக்கும் என்று இயக்குனரிடம் சொன்னதாகவும், ஆனால், கால்ஷீட் இல்லாததால் கரீனா நடிக்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
 
ஷாகித்தின் ஏமாற்றம் இத்தோடு முடியவில்லை. விஷால் பரத்வாஜின் ரங்கூன் படத்தில் ஷாகித் கபூரும், கரீனாவின் கணவர் சைப் அலிகானும் இணைந்து நடிக்கின்றனர். இந்தப் படத்தில் கரீனா நாயகி என்று ஒரு வதந்தி. அதனை விஷால் பரத்வாஜ் மறுத்துள்ளார்.
 
கரீனாவிடம் ரங்கூன் குறித்து பேசவேயில்லை. கங்கனா ரனவத்தை மனதில் வைத்தே அந்த வேடத்தை உருவாக்கினேன் என்று ஷாகித்துக்கு மீண்டும் ஒரு பல்ப் தந்துள்ளார்.
 
ஷாகித்... வேறு சாரியான ஜோ‌டியை தேடிக்கொள்ளுங்களேன்.