வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 3 மார்ச் 2021 (16:00 IST)

ஷாருக் கான் தயாரிப்பில் உருவாகும் ‘டார்லிங்ஸ்’!

நடிகர் ஷாருக் கான் மற்றும் ஆலியா பட் ஆகியோர் இணைந்து டார்லிங்ஸ் என்ற படத்தை தயாரிக்க உள்ளனர்.

ஆலியா பட் இப்போது ராஜமௌலி இயக்கும் ஆர் ஆர் ஆர் படத்தில் நடித்து வருகிறார். இது இல்லாமல் பாலிவுட்டிலும் பல படங்களில் நடித்து வரும் அவர் தனது தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கியுள்ளார். அந்த நிறுவனத்துக்கு அவர் எட்டர்னல் சன்ஷைன் புரொடக்‌ஷன்ஸ் எனப் பெயர் வைத்துள்ளார். இதை அவரே தன்னுடைய சமூகவலைதளப் பக்கத்தில் அறிவித்திருந்தார். இந்நிலையில் இப்போது அவர் ஷாருக்கானின் ரெட் சில்லிஸ் நிறுவனத்துடன் இணைந்து டார்லிங்ஸ் என்ற படத்தைத் தயாரிக்க உள்ளார். இந்த படத்தில் முக்கிய வேடத்திலும் ஆலியா பட் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.