வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வெள்ளி, 1 செப்டம்பர் 2023 (08:05 IST)

கே கே ஆர் அணியில் யோகி பாபுவை எடுக்க ஓகே சொன்ன ஷாருக் கான்!

பாலிவுட்  சூப்பர் ஸ்டார் நடிகர்களில் ஒருவரான ஷாருக்கான் நடிப்பில் தமிழ் இயக்குனர் அட்லி இயக்கும் ஜவான் திரைப்படத்தின் ஷூட்டிங் முடிந்து ரிலீஸுக்கான வேலைகள் நடந்து வருகின்றன. இந்த படத்தில் தமிழ் பிரபலங்களான விஜய் சேதுபதி, நயன்தாரா மற்றும் யோகி பாபு ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

இந்த படத்தின் ப்ரி ரிலீஸ் நிகழ்ச்சி சென்னையில் நடந்த போது கலந்துகொண்டார் நடிகர் யோகி பாபு. அவர் மேடையில் பேசும்போது தொகுப்பாளர் பாவனா “இவரை தோனி சி எஸ் கேவில் விளையாட அழைத்தார். நீங்கள் இவரை கே கே ஆர் அணியில் எடுப்பீர்களா?” என ஷாருக் கானிடம் கேட்க, அதற்கு அவர் ‘தம்ஸ் அப்’ காட்டி சம்மதம் தெரிவித்தார்.

யோகி பாபு கிரிக்கெட் விளையாட்டில் ஆர்வம் கொண்டவர். அடிக்கடி அவர் கிரிக்கெட் விளையாடும் வீடியோக்கள் வெளியாகும். சமீபத்தில் அவருக்கு தான் கையெழுத்திட்ட பேட்டை தோனி வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.