1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வெள்ளி, 1 செப்டம்பர் 2023 (07:20 IST)

மீண்டும் பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யப்போடு இணையும் ஜி வி பிரகாஷ்!

தமிழ் சினிமாவில் வெயில் திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஜி வி பிரகாஷ். அந்த படத்தின் பாடல்கள் மிகப்பெரிய வெற்றியைப் பெற தொடர்ந்து பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்து இப்போது 100 படங்களைக் கடந்துள்ளார்.

இடையில் அவர் நடிகராகவும் களமிறங்கிய 25 படங்கள் வரை நடித்துள்ளார். இப்போது நடிப்பு, இசை என இரண்டிலும் பிஸியாக வலம் வருகிறார். இப்போது சூர்யாவின் கங்குவா, சூரரைப் போற்று படத்தின் இந்தி ரீமேக் எனக் கைவசம் பல படங்களை கையில் வைத்துள்ளார்.

இந்நிலையில் டிவிட்டரில் ரசிகர் ஒருவர் அவர் முதல் முதலாக இசையமைத்த இந்தி படமான கேங்ஸ் ஆஃப் வாசிப்பூர் படத்தின் இசைத் துணுக்கை பகிர்ந்து சிலாகித்திருக்க, அவருக்கு பதிலளித்த ஜி வி பிரகாஷ் ‘மீண்டும் விரைவில் அனுராக் காஷ்யப்போடு இணைந்து பணியாற்ற உள்ளேன்” எனக் கூறி பதிலளித்துள்ளார். கேங்ஸ் ஆஃப் வாசேபூர் படத்தில் ஜி வி பிரகாஷின் இசை பெரிய அளவில் பாராட்டுகளைக் குவித்தது குறிப்பிடத்தக்கது.