நான் குடித்துவிட்டு வண்டி ஓட்டவில்லை… விபத்து குறித்து சீரியல் நடிகை மதுமிதா விளக்கம்!
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் இந்த சீரியல் மையக் கதாபாத்திரமான ஜனனி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் மதுமிதா. இந்த சீரியல் வைரல் ஹிட் ஆனதை அடுத்து அவருக்கு சமூகவலைதளங்களில் லட்சக் கணக்கான ரசிகர்கள் உருவாகி அவரை பாலோ செய்து வருகின்றனர். இந்நிலையில் அவர் தன்னுடைய நண்பர் ஒருவரோடு காரில் சோழிங்கநல்லூர் சாலையில் சென்ற போது எதிரே இரு சக்கரவாகனத்தில் வந்த காவலர் ஒருவர் மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதையடுத்து மதுமிதா குடிபோதையில் வண்டியை ஓட்டிச்சென்று விபத்தை ஏற்படுத்தியதாகவும் அடிபட்ட காவலர் படுகாயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் பரவின. அதற்கு இப்போது மதுமிதா விளக்கமளித்து வீடியோ வெளியிட்டுள்ளார்.
அதில் “ எல்லோருக்கும் வணக்கம், நான் இந்த வீடியோவை ஒரு வதந்தியை தெளிவுபடுத்துவதற்காக வெளியிடுகிறேன். சில தினங்களாக எல்லா ஊடகங்களிலும் நான் குடித்துவிட்டு கார் ஓட்டி ஒரு போலீஸ்காரர் மேல் மோதி விட்டதாகவும், அந்த போலீஸ் காரர் படுகாயமடைந்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகி வருகின்றன. நான் குடிக்கவில்லை. ஆனால் சிறு விபத்து நடந்தது உண்மைதான். அந்த போலீஸ்காரர் இப்போது நன்றாக இருக்கிறார். நானும் நன்றாக இருக்கிறேன். அதனால் இதுபோன்ற வதந்திகளை நம்பாதீர்கள்” எனக் கூறியுள்ளார்.