வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sivalingam
Last Updated : வெள்ளி, 16 ஜூன் 2017 (13:05 IST)

சூர்யாவுடன் இணைந்த சீனியர் நடிகர் கார்த்திக்

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா, கீர்த்திசுரேஷ் நடிப்பில் உருவாகி வரும் 'தானா சேர்ந்த கூட்டம்' படத்தில் ஏற்கனவே செந்தில், பார்த்திபன், சுரேஷ் மேனன், மன்சூர் அலிகான் போன்ற சீனியர் நடிகர்கள் நடித்து வரும் நிலையில் தற்போது மேலும் ஒரு சீனியர் நடிகர் இணைந்துள்ளார்.



 


90களில் கோலிவுட்டில் முன்னணி நடிகராக இருந்த கார்த்திக் தான் இந்த படத்தில் தற்போது இணைந்துள்ளார். இன்னும் பத்து நாட்கள் மட்டுமே இந்த படத்தின் படப்பிடிப்பு மீதமுள்ள நிலையில் மிகமுக்கிய கேரக்டர் ஒன்றில் நடிக்க கார்த்திக் ஒப்பந்தமாகியுள்ளதாக கூறப்படுகிறது. சூர்யா படத்தில் கார்த்திக் நடிக்கும் முதல் படம் என்பதால் இந்த படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது.

சூர்யா, கீர்த்திசுரேஷ், செந்தில், சரண்யா பொன்வண்ணன், ரம்யா கிருஷ்ணன், கோவை சரளா, கே.எஸ்.ரவிகுமார், ஆனந்த்ராஜ், ஆர்ஜே பாலாஜி, சுரேஷ்மேனன், தம்பி ராமையா உள்ளிட்டோர் நடித்துள்ள இந்த படத்தை 2D எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்து வருகிறது. அனிருத் இசையமைத்து வரும் இந்த படத்திற்கு தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவும், ஸ்ரீகர் பிரசாத்தும் படத்தொகுப்பும் செய்துள்ளனர்.