வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 1 டிசம்பர் 2018 (11:25 IST)

யுவன் ட்விட்டால் நெகிழ்ந்த செல்வராகவன்!

சூர்யாவின் என்.ஜி.கே படம் பற்றிய புது அப்டேட்  கொடுத்துள்ளார் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா.
யுவன் தற்போது கொலையுதிர் காலம், மன்னவன் வந்தானடி, மடை திறந்து, என்.ஜி.கே, கண்ணே கலைமானே, எரியும் கண்ணாடி, பிங்க் ரீமேக் ஆகிய படங்களில் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்.  
 
 ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு மற்றும் எஸ்.ஆர்.பிரபு தயாரிக்கும் இந்த படத்தை இயக்குனர் செல்வராகவன் இயக்குகிறார். இதில் சூர்யா ஹீரோவாக நடிக்க, அவருக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத்சிங் மற்றும் சாய் பல்லவி நடிக்கிறார்கள். 
 
இந்நிலையில், என்.ஜி.கே படத்திற்காக பாடகி ஷ்ரேயா கோஷலும், பாடகர் சித் ஶ்ரீராமும் இணைந்து பாடிய பாடலின் ரெக்கார்டிங் தற்போது முடிவடைந்திருக்கிறது என, இசையமைப்பாளர் யுவன் தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார். 
 
அதனை ரீ ட்வீட் செய்திருக்கும் செல்வா, "இந்த மாதிரி ஆசிர்வதிக்கப்பட்ட பாடகர்கள் கிடைத்ததற்கு கொடுத்து வைத்திருக்க வேண்டும்" எனக் குறிப்பிட்டுள்ளார். 
 
இதன் மூலம் யுவன், ஷ்ரேயா மற்றும்  சித் இவர்களின் கூட்டணியில் உருவாகியிருக்கும் அந்தப் பாடலின் எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகமாகியிருக்கிறது.