ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 12 பிப்ரவரி 2024 (08:47 IST)

18 ஆண்டுகள் கழித்து இணையும் செல்வராகவன் – சோனியா அகர்வால்!?

selva sonia
தமிழ் இயக்குனர் செல்வராகவன், தனுஷ் நடிப்பில் தயாராகும் படத்தில் சோனியா அகர்வால் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.



தமிழ் சினிமாவில் ஆயிரத்தில் ஒருவர், காதல் கொண்டேன், புதுப்பேட்டை உள்ளிட்ட பல படங்களை இயக்கியவர் செல்வராகவன். இவர் இயக்கிய காதல் கொண்டேன், 7 ஜி ரெயின்போ காலணி, புதுப்பேட்டை உள்ளிட்ட படங்களில் நடித்தவர் சோனியா அகர்வால். செல்வராகவனுக்கும், சோனியா அகர்வாலுக்கும் இடையே காதல் உண்டான நிலையில் திருமணமும் செய்துக் கொண்டனர்.

ஆனால் சில ஆண்டுகளில் இருவரும் பிரிந்துவிட்டனர். அதன்பின்னர் செல்வராகவன் படங்களில் சோனியா அகர்வால் நடிக்கவும் இல்லை. இந்நிலையில் சமீபத்தில் தனது கல்ட் க்ளாசிக் படமான புதுப்பேட்டை படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்க திட்டமிட்டு வருகிறாராம் செல்வராகவன். அதில் நடித்த தனுஷ், சினேகா, சோனியா அகர்வால் எல்லாரும் மீண்டும் இணைய உள்ளதாக பேசிக் கொள்ளப்படுகிறது.


இதுகுறித்து ஒரு சந்திப்பில் பேசிய சோனியா அகர்வால், புதுப்பேட்டை 2 படத்தில் நடிக்க அழைத்தால் செல்வேன் என்றும், செல்வராகவனுடன் இணைந்து பணியாற்றுவதில் பிரச்சினை இல்லை என்றும் சோனியா அகர்வால் தெரிவித்துள்ளார். 2006ல் வெளியான புதுப்பேட்டை படம்தான் செல்வராகவன் இயக்கத்தில் சோனியா அகர்வால் நடித்த கடைசி படம். தற்போது 18 ஆண்டுகள் கழித்து இதன் இரண்டாம் பாகம் மூலம் இருவரும் இணைய வாய்ப்புகள் உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.

Edit by Prasanth.K