செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 7 ஜனவரி 2021 (13:50 IST)

சிம்புவுக்கு வைரஸோடு பஞ்ச் வசனம் எதுக்கு? கருணாஸ் கடுப்பு!

நடிகரும் அரசியல் தலைவருமான கருணாஸ், திரையரங்குகளில் 100% இருக்கைக்ளுக்கு அனுமதி வழங்கப்பட்டிருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். 

 
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு முழுவதும் நீங்காத நிலையில் மாஸ்டர், ஈஸ்வரன் உள்ளிட்ட படங்கள் வெளியாவதால் திரையரங்குகளில் 100 சதவீதம் பார்வையாளர்களுக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. ஆனால் இதனால் தொற்று பரவும் அபாயம் அதிகரிக்கும் என எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது. 
 
இந்நிலையில் இது குறித்து நடிகரும் அரசியல் தலைவருமான கருணாஸ், திரையரங்குகளில் 100% இருக்கைக்ளுக்கு அனுமதி வழங்கப்பட்டிருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனை அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும். இவ்வளவு நாள் பட்ட கஷ்டம் வீணாக கூடாது. 
 
கொரோனா வெல்வோம், கொல்வோம் என தொற்று வியாதியிடம் என்ன வசனங்கள் தேவை இருக்கிறது? சிம்பு அது போல் பேசியது தவறு. தொற்று நோயை வெல்வோம் கொல்வோம் என்றால் எப்படி? அவருக்கு கொரோனா வந்தா தெரியும் என பேசியுள்ளார்.