1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. இ‌ந்‌திய ‌சி‌னிமா
Written By siva
Last Modified: செவ்வாய், 2 மார்ச் 2021 (20:59 IST)

ஜகமே தந்திரம் ரிலீஸ் தேதி குறித்த வதந்தி: படக்குழுவினர் விளக்கம்!

தனுஷ் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய ஜகமே தந்திரம் என்ற திரைப்படம் விரைவில் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாக உள்ளது என்பது தெரிந்ததே 
 
இந்த நிலையில் மார்ச் 26ஆம் தேதி ஜகமே தந்திரம் திரைப்படம் நெட்பிளிக்ஸ் ரிலீஸ் ஆக உள்ளதாக சமூக வலைதளங்களில் ஒரு வதந்தி பரவி வருகிற.து ஏப்ரல் 9ஆம் தேதி தனுஷின் கர்ணன் திரைப்படம் வெளியாக இருக்கும் நிலையில் அதற்கு முன்னர் ஒரு சிறிய இடைவெளியில் ஜகமே தந்திரம் திரைப்படம் ரிலீஸ் ஆவதாக செய்திகள் பரவியதால் கர்ணன் பட குழுவினர் அதிர்ச்சி அடைந்தனர் 
 
இந்த நிலையில் ஜகமே தந்திரம் படக்குழுவினர் தற்போது இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளனர். மார்ச் 26ஆம் தேதி நேற்று ஜகமே தந்திரம் திரைப்படம் வெளியாக இருப்பதாக வெளிவந்திருக்கும் செய்தி வதந்தி என்றும் இந்த படத்தின் ரிலீஸ் தேதியை முறையாக அறிவிப்போம் என்றும் அதுவரை இது குறித்து வெளிவரும் செய்திகளை நம்பவேண்டாம் என்றும் தெரிவித்துள்ளனர்