செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 3 டிசம்பர் 2021 (10:10 IST)

எதுவாக இருந்தாலும் இரண்டு நாட்கள் தள்ளிப்போடுங்கள்: செல்வராகவன் அறிவுரை!

எந்த பிரச்சனையாக இருந்தாலும் தயவு செய்து இரண்டு நாட்கள் தள்ளிப் போடுங்கள் என்றும் உடனடியாக எந்த முடிவையும் எடுக்காதீர்கள் என்றும் இயக்குனர் செல்வராகவன் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்
 
இயக்குநர் செல்வராகவன் அவ்வப்போது தனது ட்விட்டர் பக்கத்தில் பல்வேறு அறிவுரைகளை தெரிவித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது அந்த வகையில் சற்று முன் அவர் கூறியதாவது:
 
தயவு செய்து வேதனையின் உச்சத்தில் இருக்கும் போது எந்த முடிவும் எடுக்காதீர்கள். இரண்டு நாட்கள் கழித்து யோசிப்போம் என்று விட்டு விட்டு நன்கு உணவருந்தி ஓய்வெடுங்கள். இரண்டு நாட்களுக்கு பிறகு  ஒன்று பிரச்சனையே இருக்காது இல்லை நீங்கள் முடிவெடுக்கும் மனநிலையில் இருப்பீர்கள்.
 
ஏற்கனவே நேற்று மற்றும் அதற்கு முந்தைய நாட்களில் ஒரு சில அறிவுரைகளை கூறி உள்ளார் என்பதும் அந்த அறிகுறிகள் பின்வருமாறு:  வாழ்க்கையில் நடக்கும் ஒவ்வொரு பிரச்சனைக்கும் நான்தான் காரணம் என்று பழி போட்டுக் கொள்ளாதீர்கள்.  மற்றவர்கள் பாவத்தை நாம் சுமந்தது போதும் !
 
ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் மனதை குத்தி ,கிழித்து ,உடைத்து சுக்கு நூறாய் போட்ட காதல் ஒன்று இல்லாமல் இருக்காது