1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: வெள்ளி, 5 பிப்ரவரி 2021 (17:44 IST)

பாரதிராஜாவின் கிடாவெட்டு விருந்து: பிரபல இயக்குனர்கள் பங்கேற்றனர்!

பாரதிராஜாவின் கிடாவெட்டு விருந்து: பிரபல இயக்குனர்கள் பங்கேற்றனர்!
இயக்குனர் பாரதிராஜா தனது சொந்த ஊரில் கிடாவெட்டி விருந்து வைத்த நிலையில் இந்த விருந்தில் அவரிடம் பணிபுரிந்த இயக்குனர்கள் மற்றும் பிரபல இயக்குநர்கள் கலந்து கொண்டனர்.
 
இயக்குநர் பாரதிராஜாவுக்கு முதல் மரியாதை என்ற மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி தேனி அருகே கம்பம் நகரில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் இயக்குனர்கள் பாக்யராஜ், சீனு ராமசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர். மேலும் திரையுலக பிரபலங்கள் பலரும் கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.
 
இந்த நிகழ்ச்சிக்குப் பின்னர் பாரதிராஜா கிடா வெட்டி விருந்து வைத்தார். இந்த விருந்து நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைவரும் கிடாவெட்டு உணவு விருந்திலும் கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து தனது டுவிட்டரில் இயக்குனர் சீனு ராமசாமி கூறுகையில் ’கம்பம் நகரில் இயக்குனர் இமயம் பாரதிராஜா அவர்களின் கெடாவெட்டு உணவு விடுதியில் நெகிழ்வோடு கலந்து கொண்டேன். இயக்குனர் இமயம் வாழ்க என்று குறிப்பிட்டுள்ளார்